The Indus Valley Civilization Study Material And Online Test(Tamil)
சிந்துவெளி நாகரீகம்
(The Indus Civilization)
- ஹரப்பா ஒரு புதையுண்ட நகரம் ஆகும்
- ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரவியிருந்தது.
- ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், சிந்துவெளி
- நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
- முதல் எழுத்து வடிவம் சுமேரியர்கள் உருவாக்கப்பட்டது..
- ஹரப்பா முதன்முதலில் நகரத்தின் இடிபாடுகளை சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தவர்.
- அந்த பாழடைந்த செங்கல் கோட்டை உயரமானசுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம்.
- 1856-ல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
- 1920 ல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
- 1924-ல் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பா விற்கும், மொஹஞ்சதாரோ விற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
- இந்திய தொல்லியல் துறை 1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
- ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விட பழமையானது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
- மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
(The Indus Civilization Study Material) :நகர நாகரிகம்
- ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள்:
- சிறப்பான நகரத் திட்டமிடல்
- சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
- தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
- விவசாயம் மற்றும் கைவினை தொழில்களுக்கான திடமான அடித்தளம்.
(The Indus Civilization Study Material) :தெருக்களும் வீடுகளும்
- தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
- தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
- சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன.
- வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன.
- வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்படுகின்றன.
- பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும், ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
- வீடுகள் சுட்ட செங்கற்களால் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.
- சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. செங்கற்கள் சீரான பெரும்பாலான அளவுகள் உடையதாக இருந்தது. கூரைகள் சமதளமாக இருந்தன
- அரண்மனைகள்,வழிபாட்டுத் தலங்களோ இருந்தற்கான அடையாளம் கிடைக்கவில்லை.
(The Indus Civilization Study Material) :கழிவு நீர் அமைப்பு
- மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
- வடிகால் கழிவு நீர் தேங்காமல் செல்ல வசதியாக லேசான மென் சரிவைக் கொண்டிருந்தது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான துளைகளும் சரியான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.
- வீட்டிலிருந்து கழிவுநீர் பல தெருக்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலமாக முக்கிய வடிகால்களைச் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது
- ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன.
- அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
(The Indus Civilization Study Material) :பெருங்குளம்
- இந்த பெருங்குளமானது, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குளத்தின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தது.
- வட புறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள்.
- அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்க பாட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது. உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.
(The Indus Civilization Study Material) :தானிய களஞ்சியம்
- தானியக் களஞ்சியம் செங்கற்களால் உறுதியான அடித்தளமிடப்பட்ட பெரிய கட்டிட அமைப்பு.
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா “காலத்தைச் சார்ந்தது.
(The Indus Civilization Study Material) :வணிகம் மற்றும் போக்குவரத்து
- அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத, திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
- கியூனிபாரம ஆவணஙகள் மெசபடோமியா க்கும், ஹரப்பகளுக்கு இடயையேயான வணிக தொடர்பை வெளிப்படுத்துகிறது.
- தற்கால குஜராத்திலுள்ள லோதல் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
- கலிபாங்கனில் நெருப்பு குண்டம் அடையாளம் காணப்பட்டது.
(The Indus Civilization Study Material) :இலக்கியம் மற்றும் முத்திரைகள்
- அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சிந்து வெளிமுத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும் பண்டைய மெசபடோமியா வில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது
- அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
- மொஹெஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. ‘நடன மாது என்று குறிப்பிடப்படுகிறது.
- மொஹஞ்சதாரோவிலிருந்து கிடைத்துள்ள ஒரு சிலை ”பூசாரி அரசன்” என்று அடையாளம் காட்டப்படுகிறது.
- மாக்கல்லில் செய்யப்பட்ட மதகுரு அல்லது அரசர் சிலை. செம்பில் வார்க்கபட்ட நடனமாடும் சிலை இவை இரண்டு சிலைகளை மொஹஞ்சதாரோவில் கிடைத்தவை.
- சிந்துவெளி மககள் இயற்கை வணங்கினர் அரசமரம்
(The Indus Civilization Study Material) :தொழில் நுட்பம்
- வேளாண்மையில் இரட்டைச் சாகுபடி முறையையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.
- குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.
- மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளையும் அவர்கள் வளர்த்தார்கள்.
- யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தார்கள். ஆனால் குதிரைகளைப் பயன்படுத்தவில்லை.
- ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும்.
- பகுதிகளில் கனசதுரோன செர்ட் எடைகற்கல் கி்டைததுள்ளன.
- எடைகளின் விகிதம 1: 2 : 4 : 8 : 16 : 32 என்று இரண்டிரன்டு மடங்காக அதிகரிதன.
- ஹரப்பன பகுதிகளிலிருந்து சுமார் 5000 எழுதது்டைய சிறு எழுததுத தொகுதிகள் கணடுபிடிககபபடடுள்ளன.
(The Indus Civilization Study Material) :அணிகலன்கள்
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnelian) பயன்படுத்தினர்.
- சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் தெரியாது.
- மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்த. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.
- அங்கு கிடைத்த உடைந்த பானை துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடன், வடிவியல் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
- ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள்,
- அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன.
(The Indus Civilization Study Material) :சிந்துவெளி நாகரிக வீழ்ச்சி
பொ.ஆ மு 1900 ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது. அதற்குக் கீழ்க்கண்டவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.
- சிந்து வெளி நாகரீகம் பருவ நிலை மாற்றத்தால் விழ்ச்சி அடைந்து இருக்கலாம் எனவும்,
- சிந்து நதி தன் போக்கை மாற்றி கொண்டதால் விழ்ச்சி அடைந்து இருக்கலாம் எனவும்,
- அந்நிய படையெடுப்பு காரணமாகவும் விழ்ச்சி அடைந்து இருக்கலாம் எனவும் அறிஞர் குறிப்பிடுகிறார்கள்.
(The Indus Civilization Study Material) :சிந்து வெளி நாகரீகம் காலம்
- தொடக்ககால ஹரப்பா – 3300-2600 (பொ.ஆ.மு)
- முதிர்ந்த ஹரப்பா – 2600-1900(பொ.ஆ.மு)
- பிந்தைய ஹரப்பா – 1700 (பொ.ஆ.மு)
(The Indus Civilization Study Material) :சிந்துவெளி நாகரிக எல்லைகள்:-
- மேற்கே (பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் உள்ள சுட்காஜென்-டோர்)
- வடக்கே ஷோர்டுகை (ஆப்கனிஸ்தான்)
- கிழக்கே ஆலம்கீர்பூர் (உத்திரப்பிரதேசம் – இந்தியா),
- தெற்கே டைமாபாத் (மஹாராஷ்ட்ரா– இந்தியா)
- ஆகிய இடங்களை எல்லைகளாகக் கொண்டது.
(The Indus Civilization Study Material) :கால வரையறை
- புவி எல்லை – தெற்கு ஆசியா
- காலப்பகுதி – வெண்கலக்காலம் பொ.ஆ.மு.3300-1900
- பரப்பு – 13 லட்சம்
- நகரங்கள் – 6 வரிய நகரங்கள் கிராமங்கள் – 200க்கும் மேற்பட்டவை
- (கதிரியக்க கார்பன் Carbon 14 வயது கணிப்பு முறை மூலம் முடிவு செய்யப்பட்டது)
The Indus Civilization Study tamil material download link given below: