economy study materialg1Govt Jobsplanning commission study material tamilplanning commission study notes tamilplanning commssion study material in englishvao g2 study notes

Planning Commission Study Material -Indian Economy TNPSC Tamil


இந்தியாவில் திட்டமிடுதலின் தோற்றம் 1934-ஆம் ஆண்டு திரு.ஆ.விஸ்வேஸ்வரய்யா என்ற பொறியியளாலர் இவர் “இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது அடுத்த 10 வருடங்களுக்கான இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வரைவு அறிக்கையாக பார்க்கப்பட்டது. இதனடிப்படையில் தேசிய திட்டமிடல் என்ற கருத்து தோன்ற இவர் காரணமானார்.









இந்திய தேசிய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு தலைமையில் 1938-ஆம் ஆண்டு தேசிய திட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கு மேல் பல முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை செய்தது.





பாம்பே திட்டம்
பாம்பே திட்டம் என்று அறியப்படும் “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் (1944)” அடிப்படை தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. அதே நேரத்தில் அடுத்த 15 வருடங்களுக்குள் வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி தலா வருமானத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாக கொண்டிருந்தது.





சர்வோதயா திட்டம்
M.N.ராய் என்பவரால் 1945-ஆம் ஆண்டு மக்களின் திட்டம் என உறுவாக்கினார். 1950-ல் ஜெய்பிரகாச நாராயணன் என்பவரால் சர்வோதயா திட்டம் உருவாக்கப்பட்டது.





ஸ்ரீமான் நாராயண் என்பவரால் காந்திய திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை வலியுறுத்தியது. குடிசைத்தொழில் மூலமாக ஊரக வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.









சுதந்திரத்திற்கு பின் இந்திய





இந்திய சுதந்திரத்திற்கு பின், இந்திய அரசால் 1950-ஆம் ஆண்டு ‘திட்டக்குழு’ உருவாக்கப்பட்டது. இத்திட்டக்குழு மனிதவளம், மூலதனம் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வது முதன்மை பணி இதை தவிர தேசிய வளங்களை சிறந்த முறையிலும் சமமான அளவிலும் பயன்படுத்த திட்டம் வகுத்தது.





திட்டமிடலின் வகைகள்





திட்டமிடுதலில் பல வகைகள் உள்ளன. சில முக்கிய திட்ட மிடுதலின் வகைகளை உங்களுக்காக விளக்கி உள்ளேன்.





ஆணை திட்டமிடல்
இந்த வகை திட்டமிடல் சீனா, முன்னாள் சோவியத் ரஷ்யா, கியூபா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி ஒரு மைய அதிகாரம் மட்டும் இருக்கும். இந்த மைய அதிகாரமானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கு மற்றும் தீர்மானங்களை எட்ட திட்டம் தீட்டுதல், வழிகாட்டுதல் அதை நடைமுறைபடுத்த ஆணையிடல் போன்ற வேலைகளை செய்யும். மேலும் இத்திட்டம் எண்ணிக்கை அளவிலான தயாரிப்பு, அட்டவணைப்படுத்தப்பட்ட விநியோகம் மற்றும் பொருள்களின் உற்பத்தி, விலை கட்டுப்பாடு, வெளிநாட்டு பரிவர்த்தனையை பயன்படுத்துதல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை தீர்மானிக்கிறது.





மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்





இம்மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் அனைத்து பொருளாதார முடிவுகளும் மத்திய அரசால் மட்டும் எடுக்கப்படும். இந்த அரசு பொருளாதார திட்டங்களை வகுத்தல், குறிக்கோள்களை தீர்மானித்தல் மற்றும் இலக்கு மற்றும் முக்கியத்துவங்களை நிர்ணயித்தல் போன்றவைகளை செய்கிறது. இந்த அரசானது நுகர்வு, உற்பத்தி, ஊதியம் மற்றும் விலை ஆகியவற்றின் முடிவுகளை எடுக்கின்றது. முதலீட்டுகள், பொருளின் விலை நிர்ணயம், உற்பத்தி ஆகியவை மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பெரும்பாலும் சமத்துவ அல்லது கம்யூனிச நாடுகளிலேயே செயல்படுத்தப்படுகிறது.





NITI Aayog Study Material For TNPSC Tamil and Online Test









பன்முகப்படுத்தப்பட்ட திட்டமிடல்:





பன்முகப்படுத்தப்பட்ட திட்டமிடலின் செயல்பாடானது கீழிருந்து மேலாக அமையும். பல நிர்வாக குழுக்களை கலந்தாலோசித்தபின் பொருளாதார திட்டத்தினை ‘திட்ட மிடலுக்கான குழு’ தீர்மானிக்கும். தொழில்கள் சார்ந்த திட்டங்களை அந்ததந்த தொழில்களை சேர்ந்த பிரதிநிதிகளை முன்னிலையில் வடிவமைத்துக்கொள்கின்றனர். இந்த வகை திட்டமிடலில், திட்டமிடலுக்கான குழுவானது தனியார் துறைக்கு ஊக்க தொகை வழங்குமாறு மத்திய மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்துகிறது.





ஜனநாயக முறையில் திட்டமிடல்:





இந்த ஜனநாயக முறையில் திட்டமிடுதல் முறையில் விலை நிர்ணயக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. தனியார் துறையை பணக்கொள்கையின் மூலம் அரசு கட்டுப்படுத்துகிறது.





நுகர்வோரின் இறையாண்மையை பாதுகாக்க அரசு ஏகபோக உரிமைக்கு எதிரான சட்டங்களை இயற்றுகின்றது.





சுழல் திட்டமிடல்





இச்சுழல் திட்டத்தினை இடைக்கால திட்டம் என்றும் கூறலாம். பொதுவாக இது ஒரு வருட அல்லது சில குறிப்பிட்ட வருடங்களுக்கோ நடைமுறையில் இருக்கும்.





குறுகிய கால திட்டமிடல்:





இந்த திட்டத்தினை ‘கட்டுப்பாட்டுத்திட்டம்’ என்று அறியப்படும். இதை ‘வருடாந்திர திட்டம்’ என்றும் கூறலாம். காரணம் இவை ஒரு வருட திட்டங்களை மட்டும் உள்ளடக்கியது. இவ்வருடாந்திர திட்டம் அல்லது பட்ஜெட்டில் நிதி சார்ந்த திட்டங்கள் உள்ளது. அதாவது நிதி மூலதனம் மற்றும் செயல்முறை ஆகியவற்றை காணலாம்.





நடுப்பருவத் திட்டமிடல் அல்லது இடைக்காலத் திட்டமிடல்:





இத்திட்டமிடல் 3 முதல் 7 வருடங்களுக்கான திட்டம். பொதுவாக, நடுப்பருவத் திட்டமிடல் என்பது ஐந்து வருடங்களுக்கான திட்டமாக இருக்கும். வேலைவாய்ப்பை அதிகரித்தல்,
தல வருமானத்தை உயர்த்துதல் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல், வெளிநாட்டு உதவிகளை சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு வளங்கள் மூலம் வருவாயை அதிகரித்தல் மற்றும் பிராந்தியங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் போன்றவை இந்த திட்டமிடலின் முக்கிய குறிக்கோள்களாக இருக்கும்.





நீண்டகாலத் திட்டமிடல்





இதை “தொலை நோக்குத் திட்டம்” என்று அறியப்படும். காரணம் இவ்வகை திட்டமிடல் 10 முதல் 30 வருடங்களுக்கானதாகும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் கிராம புறங்களை ஒளிரச் செய்வது. இந்த நீண்டகால திட்டத்திற்கு பின்னால் இருக்கும் அடிப்படை கருத்தானது பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டுவருதலாகும். நீண்டகால திட்டத்தின் கீழ் தேர்வு செய்வதற்கான சுதந்திரமும் திட்டமிடலில் பரந்த நோக்கமும் உண்டு.





சுட்டிக்காட்டும் திட்டமிடல்





இந்த வகை திட்டமிடலில், அரசானது தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் முன் கூட்டியே கலந்தாலோசித்து, திட்டத்தின் நோக்கம் என்ன அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. 





முன்னுரிமை மற்றும் இலக்கையும் சுட்டிக் காட்டும். 1991 ம் ஆண்டில் இந்தியா ஏற்பட்ட தனியார்மயமாதல் மற்றும் தாராளமயமாதல் கொள்கையை தழுவியதற்கு பின்னால் இந்த சுட்டிக்காட்டும் திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திட்டம் 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசு ஒருங்கிணைப்பாளராகவும், கட்டுப்பாட்டாளராகவும், மற்றும் ஒழுங்குமுறையாளராகவும் இருக்கின்றது.





Planning Commission Study tamil material pdf download link given below:





We Will Upload Soon Please wait





Planning Commission Study tamil Free Online Test









More TNPSC Online Free Test Series – Go to Page









Join Our Jelegram Group






Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button