Govt Jobsnithi aayog online testnithi aayog online test in tamilnithi aayog study material for englishnithi aayog study material for tnpsc tamilnithi aayog tamil material

NITI Aayog Study Material For TNPSC Tamil and Online Test


நிதி ஆயோக்





NITI Aayog : நிதி ஆயோக் வரலாறு





NITI-National Institution for Transforming India





மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுகுதல் மற்றும் மத்திய மாநில உறவு ஆகியவற்றை மேம்படுத்த 1950 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று மத்திய திட்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்ட குழு நேருவின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. திட்ட குழுவின் தலைவராக பிரதமர் நெரு தலைமை வகித்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி மத்திய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் என்னும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதிஆயோக் என்னும் புதிய அமைப்பு நிறுவப்படும் என அறிவித்தார், இந்த அறிவிப்பின் படி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று நிதி அயோக் அமைப்பு தொடங்கப்பட்டது.









NITI Aayog : நிதி ஆயோக் நோக்கம்





நிதி ஆயோக்கின் முதன்மை நோக்கமாக மத்திய மாநில கூட்டணியில் முதலாவதாக மாநிலங்களின் வளர்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் தருகிறது, இது கிராமப்புற வேளாண்மை மற்றும் இதர கிராம செயல்பாடுகளின் அதிகபட்ச வளர்ச்சியை எட்டுதல், நாட்டின் பொருளாதர வளர்ச்சியில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டுதல், பொருளாதர வளர்ச்சியில் நாட்டின் பாதுகாப்பு வளர்ச்சி திட்டத்தையும் இணைந்து வளர்ச்சி திட்டத்தை தீட்டுதல், புதிய கண்டுபிடிப்புகள்,
தனியார் நிறுவன அல்லது தொழிலதிபர்களுக்கு உதவி அளித்தல், நாட்டில் உள்ள கலை வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல்





Planning Commission Study Material -Indian Economy TNPSC Tamil





NITI Aayog : பணிகள்





வளர்ச்சிக்கு தேவையான அடிப்படைகள் மற்றும் கருத்துக்களை வகுத்தல். மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையேயான ஒத்தியப்பை உறுதி செய்தல். நாட்டு வளர்ச்சிக்காக கூட்டாண்மை மற்றும் முன்னுரிமை மேம்படுத்துதல், மத்திய மாநில அரசின் ஒத்துயைப்புடன் அமைச்சர்கள் அரசின் திட்டங்களை அமுல்படுத்துதல். கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்தல்,
பொருளாதர வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சமூக சிக்கல்களை களைந்து பொருளாதர வளர்ச்சி காணல், தேசிய அனுபவசாலிகள், பங்குதாரர்கள், தொழிலதிபர்கள் உதவிகளை ஏற்படுத்துதல். ஆகியன நிதி ஆயொக்கின் முக்கிய பணிகள் ஆகும்





NITI Aayog : நிதி அயோக்கின் அமைப்பு





நிதி ஆயோக் தலைவராக பிரதமர் செயல்படுவார். அவர் ஒரு துறைத் தலைவரை நியமனம் செய்வார். ஐந்து முழுநேர மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர். ஒன்றிய பகுதிகளின் துணை நிலை
ஆளுநர்களைக் கொண்ட ஆளுநர் குழுவைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் குறிப்பிட்ட பிரச்சனையை தொடர்பாக விவாதிக்க மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட துறைகளை சார்ந்த வல்லுநர் ,துணை வல்லுநர் இடம்பெறுவர். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அலுவல் சாரா உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தலைமை செயல் அதிகாரியும் கொண்டிருக்கும்.





NITI Aayog : தற்போதைய நிலவரப்படி நிதி ஆயோக்






தலைவர்:நரேந்திர மோடி
துணை தலைவர்: ராஜீவ் குமார்
தலைமை செயல் அதிகாரி:அமிதாப் கான்ட்
இயக்குனர்: தினேஷ் அரோரா
உறுப்பினர்கள்: பிபேக் தீப்ராய், விகே. சரசுவத், ரமேசு சந்த், வினோத் பவுல்





Nithi Aayog tamil material pdf download link given below:





We Will Upload Soon Please wait





Nithi Aayog Study tamil Free Online Test









More TNPSC Online Free Test Series – Go to Page









Join Our Jelegram Group






Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button