Study Material
Guptas Empire Study Material and Online Test for Tnpsc Tamil
குப்தர்கள்(Guptas Empire)
(Guptas Empire) : குப்தர் வம்சத்தின் தோற்றம்
- குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் அவர், இவரது காலம் – பொ.ஆ.240-280 ஆகும்.
- இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜன் ஆட்சிக்கு வந்தார்.
- இவரது காலம் – பொ.ஆ. 280-319 ஆகும்.
- கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜன் ஆகிய இருவரும் மகாராஜா என்று கற்பிக்கப்படுகிறார்கள்.
- குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார்.
- லிச்சாவி என்பது வடக்கு பிகாரில் இருந்த பழமையான கணசங்கமாகும்.
(Guptas Empire) :முதலாம் சந்திரகுப்தர்
(பேரரசு உருவாகுதலும்)
- கடோத்கஜன் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ. 319 முதல் 335 வரை ஆட்சி புரிந்தார்.
- இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார்.
- சந்திரகுப்தர் மகாராஜா – அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார்.
- (பொ.ஆ 335 ல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தர் தனது வாரிசாக நியமித்தார்.
(Guptas Empire) : சமுத்திரகுப்தர்
- சமுத்திரகுப்தர் பொ.ஆ 335 முதல் 375 வரை ஆட்சி புரிந்தார்.
- அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை மெளரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது.
- இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றபோது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சிப் பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.
- இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
- தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.
- வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார்.
- கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
(Guptas Empire) : இரண்டாம் சந்திரகுப்தர்
- அவர் பொ.ஆ. 375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
- தனது சகோதரரான ராமகுப்தருடன் (370-375) வாரிசுரிமை போராடி ஆட்சிக்கு வந்தார்.
- பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார்.
- ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தக்காணப் பகுதியை ஆண்ட வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
- ரோமானியப் பேரரசுடனான வணிகத்தால் அரசின் வளம் பெருகியது.
- விக்ரமன், தேவகுப்தன், தேவராஜ், சிம்ம விக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறு பெயர்களாகும்
- நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர்.
- இவர்களில் மாபெரும் சமஸ்கிருத கவிஞர் காளிதாசரின், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவாக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி ஆகியோர் அடங்குவர்.
- இவரது ஆட்சிக்காலத்தில்தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவில் இருந்து இந்தியா வந்தார்.
- இவர் குப்தப் பேரரசின் வளம் குறித்து பதிவு செய்திருக்கிறார்.
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர்.
- இவரது ஆட்சிக்காலத்தில்தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.
- இரண்டாம் சந்திரகுப்தர் க்குப் பின்னர் அவரது புதல்வர் முதலாம் குமாரகுப்தர் பொ.ஆ.455 வரை ஆட்சி செய்தார்.
(Guptas Empire) : முதலாம் குமாரகுப்தர்
- முதலாம் குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்.
- இவர் சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார்.
- குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசரான ஸ்கந்தகுப்தர் முதலாம் குமாரகுப்தர் புதல்வராவார்.
- இவர் ஹுணரின் படையெடுப்பைத் தடுத்தார். ஆனால் ஹூணர் மீண்டும் மீண்டும் படையெடுப்பு மேற்கொண்டதால், அரசு கருவூலம் காலியானது.
- பொ.ஆ. 467இல் ஸ்கந்தகுப்தரின் இறப்பிற்குப் பின்னர் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.
- இவருக்குப் பின்னர் பல குப்த அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
- இவர்கள் பேரரசின் வீழ்ச்சி விரைவு படுத்தினார்கள்.
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 340 முதல் 550 வரை ஆட்சி புரிந்தார்.
(Guptas Empire) : பேரரசின் பிரிவுகள்
- குப்தர்கள் பேரரசு ‘தேசம்’ அல்லது புக்தி எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- தேசம் அல்லது புக்தி இவைகள் உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன.
- இவர்கள் அரசர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டவர் ஆவர்.
- உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்.
- உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
- தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் இவர்களுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது.
- குப்தப் பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன.
- விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாக தெரிகிறது.
- சிலசமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார். விஷ்யபதியின் நிர்வாகக் கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவி புரிந்தார்கள்.
(Guptas Empire) : குப்தப் பேரரசின் வீழ்ச்சி.
- குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார்.
- இரண்டாம் சந்திரகுப்தரின் பேரனான ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் போது ஹுணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள்.
- ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டுவதில் வெற்றி பெற்றாலும், அதன் விளைவுகள் பேரரசின் நிதி நிலையை நலிவுறச் செய்தது.
The Guptas Empire Study tamil material download link given below:
We Will Upload Soon Please wait
The Indus Civilization Free Online Test
More TNPSC Online Free Test Series – Go to Page
thanks a lot this is very usefull material for tnpsc students