யுபிஎஸ்சி தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது தெரியுமா?

மத்திய பணியாளர் தேர்வாணையம் குடிமையில் பணிக்கான தேர்வு ஒத்திவைபுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 4 -ஆம் தேதி குடுமையில் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வாசிரெட்டி கோவர்த்தன சாய் பிரகாஷ் என்பவர் உள்பட 20 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, கரோனா தொற்று சூழல் மற்றும் பல மாநிலங்களில் பெருமழை வெள்ளம் ஆகியவற்றால் தேர்வர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்’ என்று மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு, செப்டம்பர் 28 திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதனால், நீதிபதிகள் AM.கான்வில்கர், BR.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலிக் காட்சி மூலம் நேற்று விசாரணை நடத்தியது.

See Also  தமிழ் நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்.

அப்போது, யுபிஎஸ்சி தரப்பு வழக்குரைஞர் முன்வைத்த வாதம்: குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் மே மாதம் 31ஆம் தேதி நடைபெறும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து யுபிஎஸ்ஸி அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, தேர்வுகளை மீண்டும் ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இதனைப் ஏற்று கொண்ட நீதிபதிகள், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை யுபிஎஸ்சி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,‌ விசாரணை மீண்டும் புதன்கிழமை நடைபெறும் என்று கூறி உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *